Tuesday, December 2, 2025

மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மணல் திருட்டில் ஈடுபடும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று(24/09/2018) விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், மணல் திருட்டில் ஈடுபடும் போது பிடிபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு அபதாரம் விதித்து, அந்த தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவர்களிடம் திருப்பி ஒப்படைக்ககூடாது. மாட்டு வண்டியாக இருந்தாலும் கூட, மாடுகளை மட்டுமே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், வாகனங்களை ஒப்படைக்க கூடாது என, உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img