Sunday, February 1, 2026

பசுமை அதிரை இலக்கை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக “பசுமை அதிரை” என்ற இலக்கோடு 12/11/2018 அன்று நகரின் முக்கிய சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு கூண்டுகள் வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளி வளாக சாலையில் 20 மரக்கன்றுகள்,மற்றும் பழைய தபால் அலுவலக சாலைகளிலும் மரக்கன்றுகள் கூண்டுகளோடு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர்,
Rtn.முகமது சம்சுதீன்,தொடங்கிவைத்தார்.மேலும் அதிரை ரோட்டரி சங்க செயளாலர்.
Rtn.அகமது மன்சூர் அவர்கள் கூறும் போது,அதிரையில் தற்ப்போது ரோட்டரி சங்கம் பல்வேறு மக்களுக்கு பயன் தரும் நல்ல திட்டங்களை அமல் படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்,முதற்கட்டமாக இன்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும்,நகர் முழுவதும் 500மரக்கன்றுகள் நட உள்ளதாகவும்,
புதிதாக தூர்வாரப்பட்ட கடற்கரை தெரு வெட்டிகுளம் சுற்றிலும் மன் அரிப்பைத் தடுப்பதற்காக இன்று மாலை 100 பனை விதைகள் போடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில்,சங்க பொருளாளர் Rtn.சாகுல் ஹமீது, ரோட்டரி சங்க மாவட்ட பிரதிநிதி,
Rtn.வைரவன் Rtn.முகமது நவாஸ் கான்,உறுப்பினர்கள்,Rtn.ஜமால் முகமது,Rtn.அன்வர் ரஹ்மான்,மற்றும் தரகர் தெரு ஜமாத்தார்கள்,மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img