பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30), ஞாயிற்றுக்கிழமை (அக்.1), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நான்கு நாள்களிலும் வங்கிச் சேவை இருக்காது. விடுமுறை நாள்களில் ஒரு வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனைக்கான ‘என்இஎஃப்டி’ சேவை இருக்காது; எனினும் ‘ஐஎம்பிஎஸ்’ எனப்படும் உடனடி பண பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.
விடுமுறை நாள்களில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவுக்கு பணம் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
More like this

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான உயர்கல்வி...
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழச்சி...





