Sunday, February 1, 2026

தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த அதிமுக MLA!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஆங்காங்கே பல கட்சிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தர்மபுரி, மேச்சேரிக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது மேடைக்கு அருகே வந்த தங்கராஜ் என்ற அதிமுக தொண்டர்,

ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்க இருந்தீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எங்க போனீங்க ஐயா’ என்று கேள்வி எழுப்பினார். அவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அதிமுக MLA செம்மலை தொண்டரின் வாயில் அடித்தார்.

ஒருபுறம் காவலர்கள் அவரை இழுத்துச் செல்ல, மறுபுறம் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கராஜை அடித்தனர்.

இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததையடுத்து அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img