Sunday, February 1, 2026

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவு!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு, ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை(விவிபேட்) சரிபார்க்கும் முறையை, 5 வாக்குச்சாவடிகளாக உயர்த்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதை உடனடியாக அமல்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் பதிவு செய்யும் ஓட்டுக்களை, சரிபார்க்க வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்(விவிபேட்) தற்போது பொருத்தப்படுகின்றன.

ஓட்டு போட்டபின், விவிபேட் இயந்திரத்தில் வெளிவரும் சீட்டில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம். இந்த சீட்டுகள் வாக்குச்சாவடியிலேயே மீண்டும் சேகரிக்கப்படும்.

பதிவான ஓட்டுக்களுடன், விவிபேட் சீட்டுகளின் எண்ணிக்கை ஒத்துப் போகிறதா என ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் முறையை தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது. ஆனால் 50 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்கள் மனு செய்தனர்.

இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘‘50 சதவீத வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவுகள் வெளியிட 5.2 நாட்கள் தாமதம் ஏற்படும். மேலும், விவிபேட் சீட்டுகள் எண்ணுவதை அதிகரிப்பதற்கு, தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பின்பற்றும் நடைமுறைகளை மாற்றுவது சாத்தியம் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘மக்களவை தேர்தலில் 50 சதவீத விவிபேட் சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் முடிவுகள் 6 நாட்கள் தாமதமானால் பரவாயில்லை. தேர்தல் நடைமுறை நேர்மையை இது உறுதி செய்தால், 6 நாட்கள் மிகப்பெரிய தாமதம் இல்லை. விவிபேட் சீட்டுகளை எண்ணும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், தாமதத்தை மேலும் குறைக்கலாம்’’ என கூறியிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 50 சதவீத விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஆனால் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கும் முறையை, 5 ஆக உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணயை செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளும் எடுக்கும்’’ என கூறினார்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img