ஜுலை-31,
தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி சார்பில், நேற்று முதல் விமானம் புனிதப் பயணிகளுடன் மெக்கா புறப்பட்டது.
மூன்று விமானங்கள் அடுத்தடுத்து புறப்பட்டதால், புனித பயணிகளை வழியனுப்ப வந்த, 5 ஆயிரத்திற்கும் அதிகமான உறவினர்களால் விமான நிலையம் நிறைந்து வழிந்தது.
புனித பயணிகளை
ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், ஹஜ் கமிட்டி உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் வழியனுப்பினர்.
தங்கள் பால்ய கால முஸ்லிம் நண்பர்களை வழியனுப்ப, இந்து, கிருஸ்த்தவ சகோதரர்களும், விமான நிலையம் வந்திருந்து அன்பொழுக வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகளின் கையசைப்புகள், உறவுகளின் ஆரத் தழுவல்கள் என உணர்ச்சி மிகு கண்ணீருக்கிடையே புனித பயணிகள் புறப்பட்டனர்.
எங்கும் மெல்லிய தக்பீர் முழங்கியபடியே புனிதப் பயணிகள் நடைப் போட, அவர்களின் அனைத்து நடைமுறைகளையும் அதிகாரிகள் முன்னின்று எளிமைப்படுத்தி கொடுத்தனர்.
விமான நிலைய காவலர்களும், ஹஜ் சேவை தன்னார்வலர்களும் புனித பயணிகளுக்கு வழிகாட்டிய வண்ணம் இருந்தனர்.
இந்நிகழ்வில் வடபழனி இமாம் தர்வேஸ் ரஷாதி, மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமியா, மாநில துணைச் செயலளார்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அஹ்மது, இளைஞர் அணி செயலாளர் அஸாருதீன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலர் ஜிந்தா மதார் உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.









