Saturday, September 13, 2025

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 73 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/12/2019 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் சகோ.நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A. சாதிக் அகமது (இணைத்தலைவர்)

சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )

நன்றியுரை : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )
தீர்மானங்கள்:
ABMR-ன் 72-வது கூட்டத்தின் வேண்டுகோளை ஏற்று அதற்கான பதில் ABM-HO கடிதத்தை இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் சிறப்பாக நமது சேவை தொடர துஆ செய்யுமாறு அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அரசு சலுகைகளை முழு முயற்சியோடு நமதூர் வாசிகள் பயன்படும் அளவுக்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்சமயம் நகைக்கடன் மிக செம்மையாக மக்கள் முழு பயனுள்ளவகையில் உண்மையான தேவை அறிந்து கடன் விநியோகம் செய்யப்படுவதையும் அதுபோல் நமது மக்களும் அதை சரியான காலக்கெடுக்குள் திருப்பிடுவது விசயமாக ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ரியாத் சார்பாக நிரந்தர ABM உறுப்பினர்கள் எண்ணிக்கை சேர்க்கும் விதமாக பல புதிய பழைய நபர்களின் விபரங்களை தலைமையகத்துக்கு அனுப்பி கொடுக்கப்பட்டு அதன் மூலம் ரிஜிஸ்ரேஷன் ( REGISTERATION ) விஷயமாகவும் நிரந்தர ID CARD ஏற்பாடு செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நமது உழைப்பிற்காக வெளிநாடு சென்று வேலை செய்ய கூடிய நபர்களும் நமதூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில அறிவு என்பது இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்று அதன் பொருட்டு இம்மாதமுதல் ஆரம்பிக்க உள்ள ( SPOKEN ENGLISH ) நமதூர் வாசிகள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆதரவற்ற ஏழைகளின் திட்டமான மாதாந்திர பென்ஷன் விஷயமாக வரும் 2020-க்கான பென்ஷன் திட்டத்திற்கு இதுவரை பெயர் தராத சகோதரர்களிடம் ஆதரவு தந்து அதன் நன்மையை அடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஊர் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும், ஊர் நலனை நாடக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த ABMR-ன் ரியாத் கிளையை மேலும் வலுவூட்டும் வண்ணம் நமதூர் விடுபட்ட அதிரை சாகோதரர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பை ஏற்படுத்தி இந்த சேவை இன்னும் சிறப்பாக நடத்திட மேலும் பொருளாதாரம் திரட்டும் வண்ணம் நமதூர் சகோதரர்களின் ஆதரவை நாடுவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான நமதூர் அனைத்து தெருவாசிகளும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் நமதூரில் கடந்த இரு வாரங்களில் இறையடி சேர்ந்த மூவர்களான ஊர் தலைவர் சமூக சேவகர் ஹாஜி மர்ஹும் M.M.S.சேக் நசுருதீன் காக்கா, சகோ.மர்ஹும் யூசுப் ( S/O. மியன்னா காக்கா ), சகோ,மர்ஹும் முஹம்மது ராவுத்தர் ( மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு உரிமைகளின் நலச்சங்கத்தின் தலைவர் ) இவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டு இவர்களின் ஹக்கில் துஆ செய்யுமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

JANUARY 2020 10-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் இஷா தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img