Tuesday, December 2, 2025

பெரியார் பற்றி கருத்து சொல்லும்போது படிக்க வேண்டும் ரஜினிக்கு துணை முதல்வர் மறைமுக அறிவுரை…!

spot_imgspot_imgspot_imgspot_img

பெரியாரை குறை சொல்பவர்கள், தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள  ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் துனை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், தந்தை பெரியாரின் உழைப்பால் தான் தன்னை போன்ற சாதாரண  மனிதர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர காரணம் என புகழாரம் சூட்டினார்.

பெரியாருக்கு எதிராக வந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாகிவிட்டதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், பெரியாரை குறை சொல்பவர்கள், சமூக வளர்ச்சிக்காக அவர் எடுத்த முன்முயற்சிகளை தீவிரமாக படித்து ஆராய்ந்த பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என தெரிவித்தார். 
இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளைக் கொண்டு மக்கள் நலனுக்காக செயல்படுவதை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது எனவும் துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
spot_imgspot_imgspot_imgspot_img