Sunday, February 1, 2026

இரத்த தானம் என்னும் குருதி கொடை…. முழு விபரம்.

spot_imgspot_imgspot_imgspot_img

குருதி கொடை:-

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3[சான்று தேவை] மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானத்தின் தேவைகள்:-

இரத்ததானத்தின் தேவைகள்
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த தானம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்
ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.
ஒரு ஒற்றை கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.

இரத்த தானம் செய்வதற்கான தகுதிகள்:-

இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:-

இரத்தப் பிரிவு,  இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
ஹிமோகுளோபின் (Heamoglobin) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img