Monday, February 2, 2026

அதிரையில் காட்டுத்தீயாக பரவி வரும் ஆடியோ – நம்ப வேண்டாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மேலதெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் இன்று இரவு 7 மணியளவில் யாரோ ஏறிச்சென்று ஏதோ மருந்தை கலந்ததாகவும், அதனால் நாளை யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் அருந்த வேண்டாம் என்றும் அதிரை வாட்ஸ்அப் குழுமங்களில் ஆடியோ பதிவு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அதுகுறித்து விசாரித்ததில், இன்று இரவு 7 மணியளவில் 4 சிறுவர்கள் டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏரியுள்ளனர்.

அந்த குறிப்பிட்ட சிறுவர்களை அழைத்து மேலத்தெருவாசிகள் விசாரித்ததில், அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆகையால் அதிரையில் தற்போது காட்டுத்தீ போல பரவி வரும் அந்த ஆடியோ பதிவை நம்ப வேண்டாம் என்றும், யாரும் பிறருக்கு பகிர வேண்டாம் எனவும் மேலத்தெரு தாஜுல் இளைஞர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img