Monday, February 2, 2026

சாரயக்கடை சாத்தியம் எனில்,நோன்பு கஞ்சியும் சாத்தியமே !

spot_imgspot_imgspot_imgspot_img

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றால் பள்ளி கல்லூரிகள் முதல் வழிபாட்டு தளங்கள்,வணிக வளாகங்கள் சிறு வணிகம் என எல்லா வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இதனால் பலரின் வாழ்வாதாரம் அதளபாதாளத்தில் சென்றுள்ளது.

இருப்பினும் கொரோனா எனும் கொள்ளை நோயை விரட்ட அனைவரும் அரசுக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பல மாநிலங்களில் அரசால் நடத்தப்படும் மதுபான கூடங்கள், படிப்படியாக துவக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதியை தவிர்த்து ஏனைய இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்க அரசு ஆணையிட்டு உள்ளது.

சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைப்பு ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் இதனை செவியேற்காத அரசோ குடிகாரர்களை உற்சாக படுத்த சாராய கடையை வரும் 7 ஆம் தேதியன்று திறக்க மும்முரம் காட்டி வருகிறது.

ரமலான் காலங்களில் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படும் கஞ்சியை அரசு சமூக இடைவெளியை காரணம் காட்டி தடை செய்தது இதனை ஜமாத்தார்களும் ஒருமனதாக ஏற்று கொண்டனர்.

தமிழக மாவட்டங்களில், தடை செய்யப்பட்ட பகுதியை விடுத்து மற்ற இடங்களில் சாராய கடைகளை திறக்க அரசு போர்கால அடிப்படையில் பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிய வருகிறது.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ளது என ஏடுகளில் வரும் செய்திகள் உணர்த்துகின்றன.

இதன் அடிப்படையில் அரசு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜமாத்தார்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து நோன்பு கஞ்சி விநியோகம் செய்ய நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் கொடுக்க பள்ளிவாசலின் நிர்வாகிகள் ஒத்துழைப்பார்கள்.

எனவே தமிழக அரசு பள்ளிகளில் நோன்பாளிகளுக்கு கஞ்சி காய்ச்சி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

சாராயக்கடை சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம் தானே…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img