Sunday, February 1, 2026

சின்ன சிங்கப்பூரில் ஏழை எளியவர்களுக்கு வழங்கப்படும் சஹர் உணவு!!

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலம் அதிகாலை நேரத்தில் சஹர் எனப்படும் உணவையும், மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இஃப்தார் எனப்படும் மாலை உணவும் முறையாக உட்கொண்டு வருவது 1400 ஆண்டுகளில் இருந்து நபி பெருமானார் காட்டித்தந்த வழக்கமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் சின்ன சிங்கப்பூர் என செல்லமாக அழைக்கப்படும் கூத்தாநல்லூரில் நோன்பு வைப்பவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தினமும் சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கூத்தாநல்லூரில் ரமலான் காலம் முழுவதும் பொன்னாச்சி பொதுச் சேவை மையம் சார்பில் ரமலான் நோன்பு கடைபிடிக்க கூடி ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனிமையில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீடு தேடிச் சென்று சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் செல்லப்பிள்ளையாய் வலம் வந்த கொரோனா வைரஸ் காலகட்டமான இந்தநிலையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களுக்கு அங்குள்ள செல்வந்தர்களின் உதவியினால் அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு உண்ண உணவும் உடுத்த உடைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img