Sunday, February 1, 2026

அதிரை அருகே இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கடலில் கரை ஒதுங்கிய இராமேஸ்வரம் மீனவர் உடல் மீட்பு.

கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 800 க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்,  ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன் 47 , ரெஜின் பாஸ்கர் 43 , சுஜிந்தர் 19 , சேசு 53 ஆகிய மீனவர்களும் கரை திரும்பவில்லை ,  இந்நிலையில்  சேசு என்ற மீனவர் மட்டும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டணத்தில்  மீனவர்களால் மீட்கபட்டார்,

அவர் அளித்த தகவலின் படி சனிக்கிழமை இரவே காற்றின் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததாகவும், யாரும் உதவிக்கு வராத  சூழலில்  மூழ்கிய படகின் எஞ்சிய பலகையையும், ஐஸ்பெட்டிகளையும் பிடித்து  கொண்டே 48 மணிநேரம் நடுக்கடலில் தத்தளித்தோம், நான் மீட்டெடுக்க சூழலில் மீதமுள்ள மூன்று மீனவர்கள் நிலை குறித்து தெரியவில்லை என்றும் சேசு கூறினார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அருகே கொள்ளுக்காடு கடலில் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது,மீன்வளத்துறை அதிகாரிகள்,காவல்துறையினர் இணைந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.இன்னும் இருவரின் உடல்களை தேடும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img