Wednesday, March 18, 2026

பட்டுக்கோட்டை நகராட்சி முன்பு சிஐடியு அமைப்பினர் போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டையில் இயந்திரத்தில் கைமாற்றித் துண்டான பெண்ணிற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்பு உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்கும் நுண் உரம் செயலாக்க மையத்தில் கடந்த 18ம் தேதி ரேவதி என்ற பெண் ஊழியர் பணி செய்தபோது திடீரென எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கைமாற்றித் துண்டானது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று சிஐடியு உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தினர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட அவர்களை வேறு பணிக்கு அனுப்பக் கூடாது என்றும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img