Monday, February 2, 2026

மல்லிப்பட்டிணம் சுற்றுவட்டார பகுதியில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி முழுவதும் கடைகள் திறப்பு நேரம் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் 2மணி வரை மட்டும் என ஊர் பொதுமக்கள் முடிவு.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தஞ்சை மாவட்டத்தில் சுய ஊரடங்கை,கட்டுப்பாடுகளை தங்களுக்கு தாங்களே பல்வேறு கிராம,பேரூராட்சி, நகராட்சி பகுதி மக்கள் கடைகள் அடைப்பு,கடை திறப்பு நேரம் குறைத்தல் போன்ற பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் ஊர் பொதுமக்கள், வணிகர் சங்கங்கள், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்கங்கள் இணைந்து இன்று(ஜூலை.21) மாலை 4 மணிக்கு ஈசிஆர் சாலையில் உள்ள வினோத் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பால்,மருந்தகங்கள் மட்டும் இரவு 8 மணிவரை செயல்படலாம்,ஏனைய கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி,உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி, வணிகர்கள்,பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்திட வேண்டும்,ஊராட்சி முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மாத்திரைகளை சுகாதர துறை வினியோகிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img