Thursday, March 19, 2026

பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டிய நடிகர் ரோபோ சங்கர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.

திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அனுமதியோடு, பட்டுக்கோட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கே நேரில் சென்று அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுடன் சிரித்து பேசியதோடு, பல குரல்களில் பேசியும் மகிழ்வித்தனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன அழுத்தம் குறைந்து இயல்பு நிலையை அடைவதற்கு இது ஒரு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்றும் கூறினார்.

மேலும் உலகமே கொரானா வைரஸை பார்த்து அச்சப்படும் நிலையில் தன்னுடைய மனைவி கொரோனா பாதித்தவர்களை தனிமைப் படுத்தலாமே தவிர அவர்களை ஒதுக்கி வைக்க கூடாது எனவே அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து அவர்களே சந்தோஷப்படுத்தி வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ரோபோ..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img