கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரணாப் முகர்ஜி மருத்துவ மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி உடல்நிலை தீடீரென மோசமடைந்ததது.
அதன்பிறகு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.
இந்நிலையில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்தது.








