Thursday, December 18, 2025

பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட செயற்குழுவில் தீர்மானம்..

spot_imgspot_imgspot_imgspot_img

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அதிராம்பட்டினம் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் என்.முஹம்மது புஹாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் எ.அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் தேர்தல் பணியாற்ற தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, தீவிர உறுப்பினர் சேர்க்கை, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ், பேராவூரணி பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தின் மீதான விசாரணையை நான்கு வாரம் ஒத்தி வைத்த ஆளுநரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ன தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட வர்த்தகர் அணி ஒருங்கிணைப்பாளராக அதிரை அபுல் ஹசன் அவர்களும், SDTU (தொழிற்சங்கம்) மாவட்ட ஒருங்கிணைப்பாளராக புதுப்பட்டினம் ஒளரங்கசீப் அவர்களும் நியமிக்கபட்டனர்.

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் எ.டி.சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் முஹம்மது ரஹீஸ், மாவட்ட பொருளாளர் எம்.இத்ரீஸ் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒளரங்கசீப், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் எல்.முஹம்மது அஸ்கர் நன்றியுரை நிகழ்த்தினார்

.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img