Sunday, February 1, 2026

அதிரையில் சிறப்பாக நடைபெற்று வரும் ஆதார் சிறப்பு முகாம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அஞ்சல் அலுவலத்தில் பிப் 22ல் இருந்து மார்ச் 6 வரை இந்திய அஞ்சல் துறை மற்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் ஆதார் சிறப்பு சேவை முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமினை பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் புதிய ஆதார் எடுத்தல்,பெயர்,
முகவரி திருத்தம், தொலைபேசி எண் இணைத்தல் போன்ற அனைத்து ஆதார் சேவைகளும் செய்யபட்டு வருகின்றது.

இம் முகாமில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் S.சாகுல் ஹமீது மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,பட்டுக்கோட்டை அஞ்சல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஜெரால்டு சகாயராஜ்,அதிராம்பட்டினம் போஸ்ட் மாஸ்ட்டர் ராம்குமார் ஆகியோர் இம்முகாமினை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.இம்முகாமில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் நூற்றுக்கனானோர் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.வருகிற மார்ச் 2 முதல் இம்முகாம் இடமாற்றம் செய்யப்பட்டு அதிராம்பட்டினம் ECR ரோட்டில் உள்ள சாரா திருமண மண்டப வணிக வளாகத்தில் மார்ச் 6 வரை நடைபெற உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img