Wednesday, December 17, 2025

தேர்தல் விதிமுறைகள் அமல்… ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்?

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கப்பணம் எடுத்து செல்ல வேண்டும் என  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  சத்ய பிரதா சாகு , தேர்தல் நடத்தை  விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால்,பறக்கும் படை சோதனைகளை தொடங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்படப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 88,963 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இதில் 6000 முதல் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்து இதன் எண்ணிக்கை மாறும் என்றும் குறிப்பிட்டார்.

45 கம்பெனி துணை ராணுவப்படை முதல் கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இருப்பினும்  தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருவார்கள். மக்களவை தேர்தலின் போது ஆவணங்கள் இல்லாமல் 50000 ரூபாய் வரை ரொக்கப்பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அது தற்போதும் தொடரும். அதே நேரத்தில் உரிய ஆவணங்களுடன் கூடுதல் பணத்தை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம், இதன் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img