Thursday, March 19, 2026

திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.ரெங்கராஜன் ஆகியோருக்கு கடும் நேரடி போட்டி இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், பட்டுக்கோட்டை தொகுதியில் என்.ஆர்.ரெங்கராஜனை களமிறக்கி வெற்றி கண்டது.

அதே போல 32 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சீனியர் அரசியல்வாதியான கா.அண்ணாதுரையை திமுக இந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் களமிறக்கியுள்ளது.

பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள அதிரையை பொறுத்தவரை என்.ஆர்.ரெங்கராஜன், கா.அண்ணாதுரைக்கு சம பலத்தில் செல்வாக்குகள் இருந்தாலும், இம்முறை அதிரை மக்கள் 75% சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள உச்சகட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img