பட்டுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை அவர்கள் வெற்றி பெற்ற நாளில் இருந்து பம்பரமாக சுழன்று தொகுதியின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வன்னம் துறை சார்ந்த இலாகா அமைச்சர்களை அனுகி மனு அளித்து வருகிறார். அதில் குறிப்பாக அதிராம்பட்டினத்திற்கு தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள்,மற்றும் 24மணி நேர சேவை, அதிரை நகருக்கு 110KV துணை மின் நிலையம் என தேவையறிந்து செயலாற்றி வருகிறார். இது குறித்து திமுகவின் முன்னாள் நகர அவைத்தலைவர் மறைந்த பாட்ஷா முகைதீன் மரைக்காயர் அவர்களின் மகன் உமர்தம்பி கூறுகையில், அதிராம்பட்டினத்திற்கு அத்தியாவசிய தேவைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் நமது சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு, பொது ம்க்களும் முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்து பணிகளை துரிதப்படுத்த கேட்டு கொள்ள வேண்டும் என்றார். மேலும் தாம் இதுகுறித்து எனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு டேக்.செய்து பலமுறை மின்சார்ந்த பிரச்சினைகளை பதிவிட்டு வருவதாக குறிபிட்டுள்ள அவர் அனைவரும் ஒன்றிணைந்து இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





