Sunday, February 1, 2026

அதிரையில் பரபரப்பு ! சமுதாய அமைப்பின் இரு அணியினர் வாக்குவாதம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் தமுமுக என்ற பெயரில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

ஜவாஹிருல்லா அணியினரும், ஹைதர் அலி அணியினரும் தனித்தனியாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை ஒட்டி கூட்டு குர்பானிக்கு விளம்பர பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இதில் ஜவாஹிருல்லா அணியினர் சார்பில் வைக்கப்பட்ட பேனரை சில மர்ம நபர்கள் கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இச்செயலில் ஹைதர் அலி அணியினர்தான் ஈடுப்பட்டு இருப்பதாக எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த நிலையில் ஜவாஹிருல்லாஹ் அணியினரின் சிலர் நியாயம் கேட்பதாக கூறிகொண்டு சிலருடன் எதிர் தரப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் உருவானது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்,சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த காவல்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

சமுதாய அமைப்பினர் இரு அணிகளாக பிரிந்து பகைமை பாராட்டி கொள்வதால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img