Thursday, March 19, 2026

அதிரை தேர்தல் களம்: முஸ்லீம் லீக்கிடம் கெஞ்சும் திமுக- OSK வை நெரும்கும் லீக் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் நீடித்து வந்துள்ளது.

அதிரை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் லீக்கிற்கு திமுக சார்பில் ஒரு வார்டில் மட்டுமே போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முஸ்லீம் லீக் தரப்பில் கேட்கப்பட்ட 6 வார்டுகளை ஒதுக்க முடியாது என திமுக கூறியதாகவும், இதனால் விரக்தியடைந்த முஸ்லிம் லீக்கினர் கூட்டணியை விட்டு வெளியேறினர்.

இதனை அடுத்து ஒற்றுமை ஒன்றே எங்கள் இலக்கு என கொள்கை முடிவுடன் களமிறங்கிய OSK (ஒருங்கிணைந்த சமுதாய கட்டமைப்பு) வை முஸ்லீம் லீக்கினர் நெருங்கியுள்ளனர்.

இதுகுறித்து நடைபெற்ற முதல் சுற்று பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை OSK நிர்வாகிகளுடன் நடைபெற இருக்கும் நிலையில் முக்கிய கூட்டணி கட்சியான முஸ்லீம் லீக்கை திமுக வளைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பிடிகொடுக்காத முஸ்லீம் லீக்கிற்கு சாதகமான இரண்டு வார்டுகளை ஒதுக்கீடு செய்ய OSK கட்டமைப்பு முடிவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து முஸ்லீம் லீக் மாவட்ட பிரதிநிதி கூறுகையில், சமூக ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் திமுக கூட்டணியை விலகி இருக்கின்றோம்.

இந்த ஒற்றுமை சட்ட மன்றம், நாடாளுமன்ற தேர்தலிலும் நீடித்து நமக்கான அதிகாரத்தை வென்று எடுப்போம் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img