Sunday, February 1, 2026

12 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.??

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (12/02/2022) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னி யாகுமரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும்.

கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.

தென் கடலோர மாவட்டங்களில், 13 முதல் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img