Wednesday, March 18, 2026

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உறுதியேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் சயீத் சாஹிப் அவர்களின் நினைவுதின உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் SDPI கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு சமூக தளங்களில் பயணித்து, இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியினை கொண்டு சென்ற சிறந்த ஆளுமையாக திகழ்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் சாகிப் அவர்களின் நினைவு தினமான ஏப்.02 இன்று, ‘சயீத் சாஹிப் ஓர் சகாப்தம்’ என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பாக நடைபெற்றது.
நகர செயலாளர் அ.ரஜப் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் N.M. சேக்தாவூது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அஹ்மத் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சயீத் சாகிப் நினைவு கூரும் விதமாக அவர்களின் உறுதி ஏற்க்கும் ஓலையை A.அகமது வாசிக்க நிர்வாகிகள் அனைவரும் நெஞ்சிலேந்து உறுதி மொழி ஏற்க்கப்பட்டது.

சிறந்த எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, அரசியல் தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆளுமைத் தன்மைகளை தன்னகத்தே கொண்டவரும், சமகாலப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை முன்வைத்த  சயீத் சாகிப்  அவர்களின் நினைவு தினத்தில் அவரின் சிந்தனைகளை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img