அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த சூழலில் சம்மந்தப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பைப் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அஞ்சும் சூழலில் இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விணாகாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிரையில் உடைந்தது பிரதான குடிநீர் குழாய்! வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!
More like this
அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...