வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பட்டுக்கோட்டையில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை தலைவரும் தலைமை கழக செயற்குழு உறுப்பினருமான பழஞ்சூர் கே.செல்வத்தின் இல்ல திருமண விழா நடைபெறுகிறது. இதில் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் பழஞ்சூர் கே. செல்வம், மாவட்ட பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், என்.செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற இருக்கும் பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தனர்.
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





