Saturday, September 13, 2025

அதிரை அர்டா நில விவகாரத்தில் தலையிடும் அரசியல்வாதிகளுக்கு கண்டனம்! 15 தீர்மானங்களை நிறைவேற்றி அதிரடி காட்டிய தமுமுக-மமக!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த அதிராம்பட்டினம் நகர பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை 31/07/2023 அன்று மாலை 7:30 அளவில் நகர அலுவலகத்தில் ஏ.முகமது இலியாஸ் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அப்துல் மாலிக், பொறுப்பு குழு உறுப்பினர்கள் எஸ்.எம். ஏ.சாகுல் ஹமீத் மற்றும் எம்.செக் ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஏ.இத்ரீஸ் அஹமத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எல்.தீன் முஹம்மது ( மாநிலச் செயலாளர் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி) அவர்கள் தேர்தல் நடத்தி வைத்தனர். மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.எம் பாதுஷா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நகரத் தலைவராக ஹச்.சையது புகாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய நகர செயலாளராக முனைவர். ஹச்.ஷேக் அப்துல் காதர் , மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளராக எஸ்.முகமது அஸ்லாம் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினுடைய நகர பொருளாளராக ஆர்.எம்.நைனா முகம்மது அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக நகரத் தலைவர் ஹச்.சையது புகாரி நன்றி உரையாற்றினார் .

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. மத சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் அரசியல் அமைப்புக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை கண்டிக்கின்றோம்.
  2. மணிப்பூர் பற்றி எரிய காரணமானவர்களையும் பழங்குடி பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களையும் மற்றும் பாஜக அரசை இந்த பொது குழு வன்மையாக கண்டிக்கின்றது.
  3. நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுகிறோம்.
  4. ARDA நில விவகாரத்தில் தலையிடும் அரசியல் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  5. குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்வதற்காக PICMI எண் பெறுவதற்கு அதிரை கர்ப்பிணிகள் தற்போது ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டி இருக்கும் நிலையில் அந்த வசதியினை அதிரை அரசு மருத்துவமனையில் வழங்கிட வலியுருத்தப்படுகிறது.
  6. அதிரை அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் பணியாற்றிட மருத்துவரை விரைவில் நியமிக்க வேண்டும் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்.
  7. அதிராம்பட்டினத்தை விரைவாக தாலுக்காவாக அரசு அறிவிக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வாயிலாக வலியுறுத்கின்றோம்.
  8. தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வந்த தமுமுக ஆம்புலன்ஸை மாற்றி தற்போது புதிய ஆம்புலன்ஸ் வாங்க தீர்மானனிக்கப்படுகிறது.
  9. ரயில் சேவையை அதிரை மார்க்கத்தில் அதிகரிக்க வேண்டும் மற்றும் தாம்பரம் – செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
  10. 24வது வார்டு அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
  11. அதிரையை குப்பையில்லா நகரமாக மாற்றி சுகாதாரத்தை மேன்மை படுத்த வேண்டும்.
  12. அதிரையில் நிலவும் தொடர் மின்தடையை சரி செய்து விரைந்து தடையில்லா மின் சேவை வழங்க வலியுறுத்தப்படுகிறது.
  13. விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.
  14. அதிராம்பட்டினம் நகராட்சி வளர்ந்து வரும் நிலையில், இங்கு பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்ஸி, பள்ளிகள், கல்லூரி அமைந்துள்ளது. மேலும், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கும் பொதுமக்கள் பயான்பாட்டிற்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேல் கேஸ் இணைப்புகள் நகரம் முழுவதும் இருப்பதினால் எதிர்பாராத தீ விபத்துக்களை தடுப்பதற்கு அரசு தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும்.
  15. அதிராம்பட்டினத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக பனிமனை அமைக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது. மேலும், கண் சிகிச்சைக்காக அதிராம்பட்டின பொதுமக்கள் மதுரை செல்ல வசதியாக அதிராம்பட்டினத்திலிருந்து நேரடியாக மதுரைக்கு பேருந்து இயக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது. இங்கனம் *தமுமுக & மமக* அதிரை நகர கிளை
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img