Home » அதிரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்!

அதிரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைய ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள்!

0 comment

தமிழகத்தில் வட மாவட்டங்களில் வளர்ந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சி தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதானத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குரல் கொடுப்பதில் முதன்மை பெற்ற வருகிறார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முக்கியமான நபரும் தொழிலதிபருமான ஜனாப் ஜமால் முகமது என்பவர் அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் நான் இதுவரையிலும் எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்ததில்லை திருமாவளவனின் அரசியல் என்னை ஈர்த்தது அந்த வகையில் நான் என்னை இணைந்து கொண்டேன் என்றும் விரைவில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter