Saturday, September 13, 2025

அதிரையில் தமுமுக 29வது ஆண்டை முன்னிட்டு கொடியேற்றம் விழா!

spot_imgspot_imgspot_imgspot_img


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக 12.10.2023 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29வது ஆண்டை முன்னிட்டு மாலை 5:00pm அளவில் நகர அலுவலகத்தில் இருந்து கொடியேற்றம் நிகழ்ச்சி தொடர்ந்து இறுதியாக செக்கடி முக்கத்தில் நிறைவு பெற்றது இதில் நகர தலைவர் H. சையது புகாரி தலைமை வகித்தார் . மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் S.A இத்ரீஸ் அகமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். *சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர். தஞ்சை I.M பாதுஷா, மாநில துணை பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி* அவர்கள் கொடியேற்று நிகழ்ச்சியை தொடங்கி சிறப்பித்தார்கள்.
தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A. அப்துல் மாலிக், 24 வது வார்டு, மனிதநேய மக்கள் கட்சி நகர் மன்ற உறுப்பினர் ( மாவட்ட பொறுப்பு குழு தலைவர் தமுமுக தஞ்சை தெற்கு), மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர அணி நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இதில் கழக உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நகர பொருளாளர் R.M நைனா முகமது, நகர துணை தலைவர் S.முகமது யூசுப்,
நகர துணை செயலாளர்கள்
K.சஹாபுதீன் (தமுமுக) D.ஹாஜாமுதீன் (தமுமுக) A.நஸ்ருதீன் ஷேக்(மமக), S.சகுபர் சாதிக் (மமக), ஆகியோர்
இந்த கொடியேற்று நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக
S.முகமது அஸ்லாம், நகர மமக செயலாளர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

கொடி ஏற்றியவர்கள்:


1. தமுமுக அலுவலகம் – வழக்கறிஞர். தஞ்சை I.M பாதுஷா,மமக மாநில துணை பொதுச் செயலாளர்.

2. தக்வா பள்ளி – H.செய்யது புகாரி, நகரத் தலைவர்.

3. ரயில்வே கேட் – R.M நைனா முகமது , நகரப் பொருளாளர்.

4. காலேஜ் முக்கம் – A. அப்துல் மாலிக், 24வது மமக நகர்மன்ற உறுப்பினர் – தமுமுக பொறுப்பு குழு தலைவர் தஞ்சை தெற்கு.

5. பேருந்து நிலையம் – வழக்கறிஞர். தஞ்சை I.M பாதுஷா, மமக மாநில துணை பொதுச் செயலாளர்.

6. சேர்மன்வாடி – I.M பாரூக் மஹராஜ், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர்.

7. வண்டிப்பேட்டை – முனைவர். H ஷேக் அப்துல் காதர்,தமுமுக நகர செயலாளர்.

8. ஷிஃபா மருத்துவமனை – M.ஹாஜாமுதீன், தமுமுக பொறுப்பு குழு உறுப்பினர் தஞ்சை தெற்கு.

9. செக்கடி முக்கம் – பொறியாளர் A.முகமது இலியாஸ்,மமக மதுக்கூர் பேரூர் மன்ற உறுப்பினர் மற்றும் பொறுப்பு குழு உறுப்பினர் தஞ்சை தெற்கு.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img