Monday, December 1, 2025

அதிரை மததுவேச போஸ்டர் விவகாரம்., தமுமுக & மமகவினர் காவல் நிலையத்தில் புகார்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

தற்பொழுது அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடம் சம்மந்தமாக அதிரை பொதுமக்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தமிழகம் முழுவதும் பேசும்பொருளாக ஆனது.

இந்த போராட்டம் ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் சிறுபான்மை இஸ்லாமியர்களை குறிவைத்து அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு பக்கம் விளைவித்து மத கலவரத்தை உருவாக்கும் நோக்கில் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மீது அவதூறு குற்றச்சாட்டுடன் கூடிய போஸ்டரை சில கயவர்கள் ஒட்டி சென்றுள்ளனர் இருந்தனர்.

இச்சம்பவம் அதிரையில் பரபரப்பையும் சிறுபான்மை மக்களின் மீது அச்சுறுதலையும் ஏற்படுத்திய நிலையில்
இச்சம்பவத்தை செய்து மத கலவரத்தை உண்டாக்க நினைக்கும் கயவர்களை உடனடியாக அறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி அதிராம்பட்டினம் மனிதநேய மக்கள் கட்சியி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் அதிரை காவல் நிலையத்தில் இன்றைய தினம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் புகார் மனுவை ஏற்றுக்கொண்டு முதல் குற்ற அறிக்கை பதியப்பட்டத்தை உறுதி செய்து மேலும் விரைவாக இந்த சம்பவமத்தை செய்தவர்களை கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் மனித நேய மக்கள் கட்சியின் அதிரை நகர செயலாளர் S. முகமது அஸ்லம் அவர்களது தலைமையில், தமுமுக மற்றும் மமக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.அப்துல் மாலிக், தமுமுக மற்றும் மமக நகர துணை தலைவர் முகமது யூசுப், தமுமுக நகர செயலாளர் முனைவர்.சேக் அப்துல் காதர், தமுமுக நகர துணை செயலாளர் ஜகபர் சாதிக் மற்றும் மமக நகர துணை செயலாளர் சேக் நசுருதீன் ஆகியோர் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img