Sunday, February 1, 2026

இமாம் ஷாபி விவகாரம் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு மேம்போக்கானது! நகரச் செயலாளர் ராம குணசேகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் – வெல்பேர் கட்சி

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாஃபி பள்ளி செயல்பட்டு வந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளர் ராம குணசேகரனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.

2010 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியாளரால் அளிக்கப்பட்ட இடத்தை தற்போது அதிகாரத்தின் துணைகொண்டு திமுக நகரச் செயலாளர் அபகரிக்க முனைவதை திமுக தலைமை கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த இடத்தில் மீண்டும் ஷாபி பள்ளி செயல்பட அரசு துணை நிற்கும் என அறிவித்துள்ளார். இது ஒரு மேம்போக்கான அறிவிப்பாகவே தெரிகிறது.

2010ல் அரசால் அளிக்கப்பட்ட இடத்தை உரிய முறைப்படி மீண்டும் ஆவண பதிவு செய்து கொடுப்பதுதான் அதற்கான முதன்மை தீர்வாகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நகரத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராம குணசேகரன் போன்ற பாசிச சிந்தனை கொண்ட நபர்களை நீக்குவது உடனடி தேவையாகும். அதிலும் குறிப்பாக வேறொரு மாவட்டத்தில் இருந்து அதிராம்பட்டினத்தில் வந்தாரக்குடியாக குடியேறி வசிக்கும் ராமகுணசேகரனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி திமுக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வெல்பேர் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img