Sunday, February 1, 2026

அதிரையில் உயிரை சாய்க்க சாய்ந்து வரும் மின்கம்பம் – உயிர்பெறுமா அதிரை மின்சார வாரியம்..??

spot_imgspot_imgspot_imgspot_img



தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே மின்கம்பம் ஒன்று சாலையோரத்தில் சாய்ந்து கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளது.

அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையின் (தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு அருகே உள்ள சாலை) ஓரத்தில் உள்ள மின் கம்பம் சாலையில் முறிந்து விழும் நிலையில் சமீபகாலமாக  இருந்து வருகிறது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து சாலையில் செல்லும் வாகனத்தின் மேல் விழுந்து சாலை விபத்துகள் மட்டுமின்றி மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்படுத்துவதற்க்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் :-
மாதந்தோறும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் மின்சார வாரியம் என்ன தான் செய்கின்றது என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.

மேலும், அதிரையில் பல்வேறு பகுதியில் இதே போல் சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் பழுதாக உள்ளது என்றும், அதனையும் விரைவில் சரி செய்து தங்களுடைய கடமைகளை செயல்படுத்துமாறு மக்கள் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் பின்னராவது அதிரையில் உள்ள TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img