Tuesday, September 30, 2025

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6) வெளியாகவுள்ளன.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.

மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்

www.dge.tn.gov.in
மற்றும்
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...
spot_imgspot_imgspot_imgspot_img