பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, சிறு வயது முதலே திமுக தொண்டராக இருந்து கட்சியில் படிப்படியாக முன்னேறியவர். தலைமைக்கு இவர் காட்டும் விசுவாசத்தால் ஒருங்கிணைந்த தஞ்சை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், 2வது முறையாக எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை அக்கட்சி தலைமை அண்ணாதுரைக்கு வழங்கி இருக்கிறது.
இந்த சூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது மலரும் நினைவுகளை அரிய புகைப்படத்துடன் கா.அண்ணாதுரை பகிர்ந்துள்ளார்.
அதில் 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பட்டியலில் முதல் பெயராக என்னுடைய பெயர் இடம்பெற்றது. பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்னை அறிவித்தார். பட்டுக்கோட்டை நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளராக என்னை அறிமுகப்படுத்தி உரையாற்றிய போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சீதாபதி மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் நகர கழக பொறுப்பாளர் பொன்னுச்சாமி ஆகியோர் உடன் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
