அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு 10வது வார்டில் கால்வாய் ஒன்று இருந்து வருகிறது.
மேல் மூடி பக்கவாட்டு சுவர் ஏதுமின்றி திறந்த மேனியாகவே இருக்கும் இந்த கால்வாயில்தால் அப்பகுதி மக்களின் கழிவு நீர்கள் செல்கிறது.
கொசுக்கடி துர்நாற்றம் இவைகளை பொறுத்து கொண்ட மக்கள், சமீப காலங்களாக உடற்காயங்களையும் அனுபவித்து வருகிறார்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் முதியவர்கள் நடமாடும் பகுதியாக உள்ளதால் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் இதனை நகராட்சி பார்வைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
ஆனால் ஏனோ நகராட்சி நிர்வாகம் கண்டும் காணமால் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நகர் மன்ற தலைவரின் சொந்த வார்டாகவும் உள்ளதால், கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10ஆம் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதிரையில் சின்னா பின்னமான வாய்கால்- நகராட்சி தலைவர் வார்டின் அவலம் – தவறி விழுந்த குழந்தையின் கை முறிவு..!!
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...