Saturday, September 13, 2025

தமிழ்நாட்டிலேயே அதிரை மேற்கு நகரம் தான் நம்பர் ஒன்.! எம்.எல்.ஏ புகழாரம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிரையில் திமுக மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துக்கொண்டார்.

முன்னதாக ஜாவியா நிறைவு நாளையொட்டி ஜாவியா மஜ்லிஸ் முடிந்து வெளியே வந்த ஆயிரக் கணக்கானோரை சந்தித்து கடந்த தேர்தலில் திமுகவுக்கு  வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து மார்க்கெட் சாலை அருகில் திமுக கொடியை ஏற்றி வைத்து பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே சதவீத அடிப்படையில் அதிகபட்சமாக 90% வாக்குகளை உதயசூரியனுக்கு அளித்து அதிரை மேற்கு நகர மக்கள் மகத்தான வெற்றியை பரிசளித்திருப்பதாக கூறினார்.  இதனால் அதிரையின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் திமுக கடமைப் பட்டிருப்பதாகவும் கா.அண்ணாதுரை தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img