அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 6 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிரை WFC – PFC பட்டுக்கோட்டை அணிகள் மோதிய போட்டி மழை குறுக்கிட்டதால் தடைபட்டது. இதனிடையே இத்தொடரின் 10வது போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் வெற்றியை தன்வசமாக்க போராடினர்.
முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் அதிரை WFC அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், ஒருபக்கம் மீண்டும் அதிரை WFC அணி கோல் அடித்ததும், பட்டுக்கோட்டை அணியினர் தனது ஆட்டத்திறனை வேகப்படுத்தினர். இதன் பலனாக PFC பட்டுக்கோட்டை அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
இருப்பினும் போட்டியின் முடிவில் அதிரை WFC அணி 2 – 1 என கோல் கணக்கில் PFC பட்டுக்கோட்டை அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.