Sunday, February 1, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : NMFA பொதக்குடியை வீழ்த்திய அதிரை ROYAL FC..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் 11வது போட்டியான இன்று அதிரை Royal FC – NMFA பொதக்குடி அணிகள் மோதினர். போட்டி ஆரம்பித்ததும் இரு அணியினரும் தங்களது முதலாவது கோலை பதிவு செய்ய முனைப்பு காட்டி கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் சமமாக அமைந்த போதிலும், முதல் பகுதி நேர ஆட்ட முடிவு வரை அது முடியாமலே போனது.

இதனையடுத்து இரண்டாவது பகுதி நேர ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, அதிரை ROYAL FC அணி தனது முதல் கோலை பதிவு செய்து முன்னிலை வகித்தது. சீரான இடைவெளியில் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் NMFA பொதக்குடி நழுவ விடுவதை பயன்படுத்திக் கொண்ட அதிரை ROYAL FC அணி, மீண்டும் ஒரு கோலை பதிவு செய்து 2 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளதன் மூலம், இத்தொடரில் 3 அதிராம்பட்டினம் கால்பந்து அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img