Sunday, September 14, 2025

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக் கணக்கை துவங்கிய அதிரை AFFA..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு விழாவோடு துவங்கியது. இதில் தென்னிந்திய அளவில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

இத்தொடரின் 16வது போட்டியில் களமிறங்கிய அதிரை AFFA, AFC ஆலத்தூர் அணியை எதிர்கொண்டது. முன்னதாக நேற்று 24.06.2025 நடைபெற்ற இரு அணிகளுக்கிடையேயான போட்டி 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால், நடுவர்கள் Re-Match அறிவித்ததையடுத்து இன்று போட்டி மீண்டும் நடைபெற்றது.

விறுவிறுப்பாக துவங்கிய முதல் பகுதி நேர ஆட்டத்தின் நடுவில், அதிரை AFFA அணி வீரர் செய்த தேவையற்ற தவறால், ஆலத்தூர் அணிக்கு Penalty Kick வாய்ப்பு கிடைத்தது. தக்க சமயத்தில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆலத்தூர் அணி தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இருப்பினும் முதல் பகுதி நேர அட்டம் முடிவடைவதற்குள், அதிரை AFFA அணி வீரர்களின் அசத்தலான Pass க்கு கிடைத்த பலனாக கிடைத்த வாய்ப்பை AFFA அணி கோலாக மாற்றியது. இதனால் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இவ்விரு அணிகளும் 1 – 1 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

இதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், இரு அணிகளும் அடுத்த கோலுக்கான வாய்ப்புகளில் மும்முரம் காட்டினர். இருப்பினும், சீரான இடைவெளியில் AFFA அணிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோலுக்ககாக AFFA அணி வீரர் Kick செய்த போது, அதனை தடுக்க முயன்ற ஆலத்தூர் அணி வீரரின் முயற்சி பலனளிக்காமல் Own Side கோலாக AFFA வுக்கு மாறியதும் AFWA அரங்கமே ரசிகர்களின் கரவொலிகளால் அதிர்ந்தது.

இறுதியில் 2 – 1 என்கிற கோல் கணக்கில் அதிரை AFFA அணி ஆலத்தூரை வீழ்த்தி தனது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img