அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று 27.06.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிரை AFFA – ZAMF காயல்பட்டினம் அணிகள் மோதினர். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் விதமாக தங்களது அணி வீரர்களுடன் வியூகங்களை வகுத்ததும் போட்டி துவங்கியது.
முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களுக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதை கோலாக்க முயற்சித்த போது பலனளிக்கவில்லை. இதனால் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சம நிலையில் இருந்தனர்.
இரண்டாவது பகுதி நேர அட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே அதிரை AFFA அணி முதல் கோலை பதிவு செய்தது அதிரை ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்ற சிறிய நிமிட இடைவேளையில் காயல்பட்டினம் அணியும் தனது முதல் கோலை பதிவு செய்ததால் ஆட்டம் சூடுபிடித்தது.
அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கிற போதெல்லாம் எப்படியாவது கோலாக்கிட வேண்டும் என்கிற முயற்சியில் இரு அணி வீரர்கள் செயல்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், அதிரை AFFA அணிக்கு கிடைத்த அருமையான Pass வாய்ப்பை AFFA அணியின் வீரர் இஸ்மாயில் கோலாக்கினார்.
இப்போட்டியை சமநிலைக்காவது கொண்டு சென்றிட வேண்டும் என்கிற முனைப்பில் காயல்பட்டினம் அணி முன்னேறினாலும், AFFA அணி வீரர்களின் சிறந்த Defense ல் காயல்பட்டினம் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இறுதியில் அதிரை AFFA அணி 2 – 1 என்கிற கோல் கணக்கில் ZAMF காயல்பட்டினம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.