அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையிலும், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகள் களமிறங்கியிருப்பது கட்சிக்குள் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லம் விருப்பமனு தாக்கல் செய்து தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து திமுக கிழக்கு நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான இராம குணசேகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று விருப்பமனு அளித்தார்.
இந்நிலையில், திமுகவின் செயற்பாட்டாளரான மரைக்கா K.இதிரீஸும் பட்டுக்கோட்டை தொகுதிக்கான விருப்பமனுவை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ஒரே நகரைச் சேர்ந்த மூவர் டிக்கெட்டுக்காக முயற்சியில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கு கட்சித் தலைமையகம் இறுதி வாய்ப்பு வழங்கும்?
அதிராம்பட்டினம் ஆதிக்கம் செலுத்துமா?
அல்லது சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிய வரும் நாட்களில் தான். பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கான போட்டி தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.








