Monday, March 9, 2026

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கதாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை 17வது வார்டு கவுன்சிலர் மொய்தீனின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு மாதமும் தமது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்பின் முக்கியமானதாக உள்ள லார்வா புழுக்கள் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லையிலிருந்து ஒரு அளவிற்கு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் நகரின் பல பகுதிகளில் இன்னும் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே அதிராம்பட்டினம் நகராட்சியினர், ஒரு வார்டில் மட்டுமல்லாமல் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக பூச்சி மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...
spot_imgspot_imgspot_imgspot_img