பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில் பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் கிழக்கு, மேற்கு திமுக அலுவலகங்களுக்கு கா. அண்ணாதுரை எம்எல்ஏ வருகை தந்தார். அவரை கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து, வரவேற்பளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.














