அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ,மாணவிகள் ஆர்ப்பாட்டம்.
மாநிலம் முழுவதும் தமிழக அரசின் 60 சதவீத பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள்,அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.
இந்நிலையில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக ஆளும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.மாநில அரசின் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.















