Wednesday, March 18, 2026

குற்றாலத்தில் குளிக்க தடை !

spot_imgspot_imgspot_imgspot_img

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிரையர்களின் பெரும்பாலானோர் ரமளான் முடிந்த பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் நீராட செல்வது வழக்கம்.

அந்த வகையில் இவ்வாண்டும் ஏராளமான அதிரையர்கள் தனியார் வாகனங்கள் மூலம் அங்கு செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

காற்றுடன் கூடிய சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான சூழல் நிலவிவருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பிரதான அருவியில், வளைவையும் தாண்டி தண்ணீர் பேரிரைச்சலோடு கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, குற்றால அருவிகளில், சுற்றுலா பயணிகள் நீராட காவல்துறையினர் தடை விதித்திருக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img