Friday, March 20, 2026

புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது.

ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் படி நேற்று போர்கால அடிப்படையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

சில சமுகவிரோதிகளின் இந்த செயல்களால் அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி ஆய்வாளரின் உத்தரவு படி இப்பணி நடைபெற்றது.

இனிவரும் காலங்களில் தண்ணீர் சீராக வரும் எனவும் இனி இது போல் நடக்காமல் ஊர் மக்களே அந்த சில சமுக விரோதிகளை கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img