Monday, February 2, 2026

கஜா புயல் காரணமாக அதிரை புயல் மையம் காப்பகத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயல் எதிரொலியை அடுத்து கடலோரத்தில் வசிக்கும் மீனவ குடும்பங்களுக்கு மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை முதல் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை கடலூர் – பாம்பன் இடையே “கஜா” புயல் கரையை கடக்கவுள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆதலால் பொதுமக்கள் தங்குவதற்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரையில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று வள்ளிகொள்ளை காட்டில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடத்திழும் 50 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர் மற்றும் கீழத்தோட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இதில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு சாப்பாடு அத்தியாவசிய பொருட்கள் போன்ற அனைத்தும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு தற்போதைய தாசில்தாராக அருள் ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img