Sunday, May 5, 2024

ஆலத்தூரை சாய்த்த அதிரை AFFA!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி ஷிஃபா மருத்துவமனை அருகேயுள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் முதலாவது ஆட்டத்தில் அதிரை AFFA – ஆலத்தூர் அணிகள் மோதின.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த கரகோஷ ஒலிகளுக்கு மத்தியில் மைதானத்தில் நுழைந்த AFFA அணி வீரர்களுக்கு ஆரம்பமே அசத்தலாக அமைந்தது.

AFFA அணி வீரர் ஷஃபீக் லாவகமாக கொடுத்த பந்தை AFFA அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆசிப் கோலாக மற்றினார்.

இறுதியாக அதிரை AFFA அணி 1 – 0 என்கிற கோல் கணக்கில் ஆலத்தூர் அணியை வீழ்த்தி வெளியேற்றியதோடு அடுத்த சுற்றுக்கும் AFFA அணி தகுதி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கலைவாணர் 7’s கண்டனூர் – மார்க்ஸ் மன்னார்குடி அணிகள் மோதின.

இதில் கண்டனூர் அணி 3 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நாளைய தினம் நடப்பு சாம்பியனான Jegan Memorial தூத்தூர் கன்னியாகுமரி – காரைக்கால் அணிகளும், காயல்பட்டினம் – மலப்புரம் கேரளா அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...